புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று சத்திஷ்கர் 15.79 சதவீதமும், மத்திய பிரதேசம் 7.35 சதவீத மருந்தையும் வீணடித்துள்ளன.
அதே சமயம் கடந்த மாதம் கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகள் தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி மத்திய சுகாதார துறையின் பாராட்டுதலைப் பெற்றுள்ளன. கேரளாவில் 1.10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும், மேற்கு வங்கத்தில் 1.61 லட்சம் தடுப்பூசிகளும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.