டெல்லி: என் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’  என கட்சி மீதான அதிருப்தி காரணமாக  பாஜக-வில்  தனது மகனுடன் இணைந்த முன்னாள் முதல்வர் சாம்பாய்சோரன் தெரிவித்து உள்ளார்.

கனிமவள ஊழல்  மற்றும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையிலடைக்கப்பட்டபோது,  ஜார்க்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரன்  தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரதுமனைவி முதல்வராக பதவி ஏற்பார் என கூறப்பட்ட நிலையில், அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார்.

இதற்கிடையில் சோரனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமினில் வெளியே வந்ததும், மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் வகையில், சாம்பாய் சோதனை ராஜினாமா செய்ய வலியுறுத்தினால். இதனால் இருவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.  பின்னர், வேறு வழியின்றி சாம்பாய்சோரன்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் தனிக்கட்சி தொடங்குவார் அல்லது பாஜகவில் இணைவார் என பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  சில நாட்களுக்கு முன்னர், சாம்பாய் சோரன் தன்னுடைய எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இவர் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்டு 30ந்தேதி)  ராஞ்சியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க தலைவர்கள் சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்த பிஸ்வா சர்மா, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சம்பாய் சோரன், “மக்களுக்கு நீதி கிடைப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் வியர்வை யாலும், ரத்தத்தாலும் நான் வளர்த்தேன். ஆனால், அதே கட்சியால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை. அதனால், பா.ஜ.க-வில் சேரவேண்டிய நிலைக்கு ஆளானேன். இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஜார்க்கண்ட் அரசால், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நான் கண்காணிப்புக்குள்ளானபோது, பா.ஜ.க-வில் சேரவேண்டும் என்ற எனது தீர்மானம் வலுவானது” என்று கூறினார்.

மேலும்,  என்னை பணி செய்ய விடாமல் ‘அமுக்கி வைக்க விரும்புகின்றனர். இதைய றிந்து பாஜகவில் சேர்ந்தேன் என்றவர்,  ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசாங்கம் தனது நடமாட்டத்தை கண்காணிப்பதாக குற்றம் சாட்டியதுடன்,   இது “வெட்கக்கேடான செயல்” என்று கூறினார்.

ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் அரசின் மிகப்பெரிய பலமே அங்கிருக்கும் பழங்குடி மக்களின் ஆதரவுதான் என்றிருக்கும் நிலையில், மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்ட சம்பாய் சோரன் விலகியது அந்தக் கட்சியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.