ராஞ்சி

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்

ஜார்கண்ட் மாநில முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏற்கனவே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாதால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். ஹேமந்த் சோரன் சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த பினனர் ஜூன் 28-ம்தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து விடுதலையானார். கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் இடு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கிய பின்னர் ஹேமந்த் சோரன், ஆள்நரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடந்த 4 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுந்ர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். விரைவில் ஹே மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.