சென்னை: மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், அதில் பல சிக்கல் எழுந்துள்ளதால், அது குறித்து ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறது. அதற்கான காலக்கெடு மார்ச் 30ந்தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி,   நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசு செயல்பட்டு வருகிறது என்றும்,  மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.