சென்னை
நடிகை சீதா தனது வீட்டில் நகை திருட்டு போனதாக புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை சீதா கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘ஆண்பாவம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர், நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
பிறகு ஒரு தொலைக்காட்சி நடிகரை மணந்து அந்த மணவாழ்க்கையும் சீதாவுக்கு தோல்வியாக முடிந்த்து.. நடிகை சீதா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருஇறார். இவர் தற்போது விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.
நடிகை சீதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்
நான் கடந்த மாதம் 31-ம் தேதி, உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து நான் அணிந்திருந்த 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கினேன். எழுந்து பார்த்தபோது அந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது. எனவே அந்த நகைகளை கண்டுபிடித்து தரவேண்டும்
என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சீதா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.