பகட்டு வாழ்வின் பிம்பமாய் இருந்த ஜெட் விமான சேவை :
ஒருக்காலத்தில் கோடிசுவரர்களின் , பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் அடையாளமாக விளங்கியது. அந்த அடையாளம் தற்பொழுது மாறி உள்ளது. இப்போது கோடி கோடியாய் செலவு இல்லாமல் நீங்களும் ஒரு மில்லியனரைப் போல ஒரு தனியார் ஜெட்டை முன்பதிவு செய்ய முடியும். ஜெட்சீல், புக் மை சார்டர் போன்ற ஆப்(App) சார்ந்த சேவைகள் மூலம் ஒரு நிமிடத்தில் நீங்கள் ஒரு சார்டர்ட் விமானத்தை பதிவு செய்யலாம். “இது ஒரு காரை முன்பதிவு செய்வது போல. நீங்கள் உங்களுக்கு விருப்பமான புறப்பாடு மற்றும் வருகை இடங்கள், உடன் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, நேரம், அனைத்தையும் முடிவுசெய்து ஒரு விமானத்தை முன்பதிவு செய்ய முடியும்,” என்று கடந்த மாதம் ஜெட்ஸ்டீல்ஸை தொடங்கிய ஜெட்செட்கோ எனும் சார்டர் விமான இணையதளச் சேவையின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கனிகா டேக்ரிவால் கூறுகிறார். ஒரு தனி விமானத்தின் பாரம்பரியமான புக்கிங் முறையில் நுகர்வோர் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே எந்த நேரடித் தொடர்பும் இருக்காது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமான நிறுவனங்களிடம் விலையை பேரம் பேச உங்களுக்கு ஒரு தரகர் கிடைப்பார். “இந்த செயல் ஒரு வீட்டை வாங்குவதுப் போலத் தான். ஆனால் இதில் நீங்கள் பணம் செலுத்தும் வரை வீட்டைப் பார்க்க முடியாது. இதில் எந்த நிதி பொறுப்புக்கூறலோ அல்லது ஒரு பாதுகாப்பான விமானம் கிடைப்பது கூட உத்தரவாதம் இல்லை,” என்று டேக்ரிவால் கூறுகிறார். இதற்கு மாறாக, இந்த புதிய இணையதளங்கள் அந்த இடைவெளியை போக்க முயற்சிக்கின்றன. “பாரம்பரிய ஆஃப்லைன் முறையில் ஒரு மேற்கோளை உருவாக்க 48 மணி நேரம் வரை ஆகும். இணையதளங்கள், விமானங்களைத் தேடும் செயல்முறை, டிக்கெட்டின் தோராயமான விலை மற்றும் முன்பதிவு ஆகிய செயல்முறைகளை குறைத்து ஒரு நிமிடத்திற்குள் முடிவடைய உதவுகின்றன, ” என்று டிசம்பர் 2015 ல் புக் மை சார்டர்ஸை தொடங்கிய பெரான் ஏவியேஷனின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் வாத்வா கூறுகிறார்.
உதாரணமாக, புக் மை சார்டர்ஸ் தற்போது 40 விமானம் நிறுவனங்களை விருப்பங்களில் காட்டுகிறது மற்றும் இந்தியா முழுவதும் 129 விமான நிலையங்களில் இணைப்பு வைத்துள்ளது. “ஆரம்பத்தில், தனியார் ஜெட்கள் பெருமதிப்புள்ள வாடிக்கையாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன அதாவது தொழிலதிபர்கள், பெரிய வழக்கறிஞர்கள் மற்றும் டாக்டர்கள் வணிக கூட்டங்களுக்காக இந்தகளை பதிவு செய்வர். இன்றைய காலத்தில், வாடிக்கையாளர்களின் நிதி பின்னணி உயர் வருவாயாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் சொகுசு பயணமாக மாறி வருகிறது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள குறுகிய தூர கவர்ச்சியான இடங்களுக்கு பலர் முன்பதிவுகள் செய்கின்றனர்.
₹ 60,000 இருந்தால் தனியாய் பறக்கலாம் !
சமீபத்தில், ஒரு வாடிக்கையாளர் தனது பேச்சுலர் பார்டியை மாலத்தீவில் கொண்டாட ஒரு தனியார் ஜெட்டை எங்களிடம் முன்பதிவு செய்தார்,” என்று டேக்ரிவால் கூறுகிறார். தனிநபர் திட்டமிடல் தனியாக பறப்பதென்பது ஒரு அனுபவம் மிக்க பயணமாதலால், இந்த சந்தர்ப்பத்தில் இணையதளங்கள் பயண அமைப்பாளர்களாக மாறிவருகின்றன. எனவே உங்கள் உணவு, பானங்கள் மற்றும் விமானத்தில் பயன்படுத்தக்கூடிய தேவையான பொருட்கள், மற்றும் விடுதிகளுக்கு கொண்டுவிட்டு கூட்டிச் செல்லும் தனியார் கார்கள் என அனைத்தையும் நீங்களே தேர்வு செய்ய பெறுவீர்கள். ஆனால், இவற்றிற்கு எவ்வளவு செலவாகும்? “பறக்கும் ஒரு மணி நேரத்திற்கு ₹ 60,000 முதல் 5 லட்சம் வரை செலவாகும், அதைத்தவிர பயண திட்டமிடல் செலவுகள் இருந்தால் அதுவும் சேர்க்கப்படும்” என்று டேக்ரிவால் கூறுகிறார்.