டில்லி

ர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கல் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் கடனில் மூழ்கி நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் தினசரி நிர்வாக செலவுக்கும் கூட பணமின்றி அந்த நிறுவனம் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையில் ஒன்று திரண்டுள்ளனர்.  . நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன்வராமல் உள்ளனர்.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாக செலவுகளுக்கு நிதி இல்லாததால் தனது சேவைகளை தற்காலிகமாக முழுவதும் முடக்கி உள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறிது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. இன்னும் 10 தினங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 40 முதல் 45 விமானங்கள் மீண்டும் பறக்க உள்ளன.

ஜெட் ஏர்வேஸ் விமானங்களை ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் ஊழியர்களுடன் சேர்த்து குத்தகைக்கு எடுக்க உள்ளன. தற்போது விமான பயணிகளுக்கு போதுமான விமானம் இல்லாததால் கட்டணம் உயர்ந்து வருகிறது. எனவே இந்த நடவடிக்கை மூலம் விமானம் அதிகரிப்பதால் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி ஊழியர்களுக்கும் ஊதியம் கிடைக்க வாய்ப்பு உண்டாகி இருக்கிறது.