பாகிஸ்தான்:
பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் அதிரடியாக வேட்டையாடியுள்ள நிலையில், இந்தியா மீது ஜெய்ஷ்இ முகமது பயங்கர வாத அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு பணிகளில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ்இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானார்கள். இது பெரும் பரபரப்பையும், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி இந்தியா விமானப்படையை சேர்ந்த 6 விமானங் கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சென்று, அங்கு இயங்கிய முக்கிய பயங்கரவாத முகாம்களை கூண்டோடு தாக்கி அழித்தது. இதில் ஏராளமான ஜெய்ஷ் இ பயங்கர வாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தியா மீது கோபம்கொண்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர்,டில்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் உள்பட பல மாநிலங்களும் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளன.