மனாமா: பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற சகிர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 2 போட்டியில், இந்தியாவின் ஜெஹான் தருவலா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் பட்டத்தைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 22 வயதாகும் ஜெஹான் தருவாலா.

இப்போட்டியில், தருவாலாவுடன் கடுமையாக மோதியவர்கள், மைக் ஷுமேக்கர் மற்றும் டேனியல் டிக்டம் ஆகியோரே. இவர்கள் இருவரும், பந்தயத்தில், முதல் 3 இடங்களுக்குள் மாறி மாறி இடம்பிடித்தனர்.

இறுதியில், தனது அபாரத் திறமையால், இந்தியாவின் ஜெஹான் தருவாலா முதலில் வந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அவர் கூறியதாவது, “மோட்டார் விளையாட்டு என்பது இந்தியாவில் பெரிய ஒன்றாகும். அதற்காக நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, எனக்குப் பெரியளவிலான ரசிகர் வட்டம் இருக்கிறது. எனது வெற்றியின் மூலம், இந்தியாவைப் பெருமையடைய வைப்பதே எனது நோக்கம்” என்றுள்ளார் தருவாலா.