நியூயார்க்
உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் அமேசான் நிறுவன தலைவருமான ஜெஃப் பெஸோஸ் நிலவில் வசிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மனிதனின் மிகப்பெரிய கனவான நிலவில் கால் வைப்பதை அமெரிக்கா சென்ற 1969 ஆம் வருடம் நிறவேற்றியது. அதன் பிறகு சந்திரனுக்கு பல விண்வெளி வீரர்கள் சென்ற போதிலும் யாரும் அங்கு அதிக தினங்கள் தங்கி இருக்கவில்லை. அனைத்து பயணங்களுமே ஆராய்ச்சி அளவில் நடைபெற்றது.
ஆயினும் சந்திரனுக்கு இதுவரை தனியார் பயணம் செய்ததில்லை. அதை செய்விக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அவ்வகையில் ஜெஃப் பெஸோஸ் விண்வெளியில் நிலவுக்கு செல்ல வாகனம் அமைக்க விரும்பினார். தன் கனவுத் திட்டமான அந்த வாகனத்துக்கு நீல நிலா என பெயரிட்டுள்ளார்.
இந்த நீல நிலா குறித்த விவரங்களை சமீபத்தில் ஜெஃப் பேஸோஸ் வெளியிட்டார் அவர் அப்போது நிலவுக்கு பயணம் செய்வதைப் போல் நிலவில் வசிக்கவும் நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த நீல நிலா என்னும் வாகனம் 2024 ஆம் வருடம் தயாராகும் என தெரிவித்துள்ளார்.
இந்த வாகனம் தயாரானால் பல தனியார் விண்வெளி சுற்றுலா செல்வதற்கு பயன்படும் என பெஸோஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பே பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நிலவுக்கு செல்ல ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.