வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெசாஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
1995ல் ஆன்லைன் புக் ஸ்டோராக அமேசானை ஜெப் பெசாஸ் தொடங்கினார். இப்போது 1.7 ட்ரில்லியன் டாலர்கள் பெறுமான இ காமர்ஸ் ஜெயண்ட்டாக உருவெடுத்துள்ளது அமேசான். 191.2 பில்லியன் டாலர்கள் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்துக்குச் சென்றார்.
டெஸ்லா பங்குகள் பங்குச்சந்தையில் 2.4% குறைந்ததையடுத்து எலோன் மஸ்க்கின் சொத்து 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனையடுத்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னதாக டெல்ஸா நிறுவனப் பங்குகள் உயர்ந்து கொண்டே வந்ததால் எலோன் மஸ்க் முதலிடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அமேசான் நிறுவனர் முதலிடத்திற்கு மீண்டும் வந்தார்.
இப்போது டெல்சாவைக் காட்டிலும் பெசாஸ் 995 மில்லியன் டாலர்கள் கூடுதலாக சொத்துகளை உடையவராகி டெல்சா நிறுவனர் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார்.