ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவெல்த் மேன் என்ற படத்தில் நடிக்கிறார் மோகன்லால். இது முற்றிலும் புதிய கதை. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் தனது ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் இதனை தயாரிக்கிறார்.

அனுஸ்ரீ, அதிதி ரவி, லியோனா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், பிரியங்கா நாயர், ஷிவதா, சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ப்ரோ டாடி’ படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் மோகன்லால்.

மோகன்லால், த்ரிஷா நடிப்பில் தொடங்கப்பட்ட படத்தை கைவிட்டு, மோகன்லால் நடிப்பில் புதிய படத்தை அறிவித்துள்ளார் ஜீத்து ஜோசப்.

அடுத்த மூன்று வருடங்களில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மட்டும் ஐந்து படங்களில் நடிக்க மோகன்லால் ஒத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.