பாட்னா

க்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிரபல தேர்தல் உத்தியாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைக்க பாஜகவுக்கு உதவி செய்தார்.  அத்துடன் அவர் திருணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்டிகளை வழங்கி உள்ளார். அவர்  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது.  ஆயினும் மத்திய அரசு கொண்டு வந்த குடியரிமை சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரசாந்த் கிஷோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.   பாஜகவுக்கு எதிரான அவரது பேச்சு மற்றும் டிவிட்டர் பதிவுகளால் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்   தலைவருமான நிதிஷ் குமாருக்கு தர்மசங்கடமான் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் குறித்து நேற்று நிதீஷ் குமார், “பிரசாந்த் கிஷோர் சில கட்சிகளுக்குத் தேர்தல் உத்தியாளராக பணி புரிந்து வருகிறார்.  அதே வேளையில் இந்த கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டுக்கு எதிராக நடந்துக் கொள்வதால் கட்சிக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  அவர் கட்சியில் இருந்தால் இருக்கட்டும் அல்லது விலகினாலும் கவலை இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக விலக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  அவருடன் அக்கட்சியின் மற்றொரு தலைவரான பவன் வர்மாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.