
நடிகை ஜெயஸ்ரீ ராமையா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னட மொழியில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் . அவர் குடும்பத்திலிருந்து விலகி தனிமையில் இருந்ததாக அவரது நண்பர் ஷில்பா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதனயகனஹல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .
[youtube-feed feed=1]