டில்லி:
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்புமனுவில் அவரது கைரேகை வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.
ஜெயலலிதா கர்நாடக சிறையில் இருந்தபோது, அங்குள்ள பதிவேட்டில் இருந்த அவரது அவரது கைரேகையை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
ஜெ. கைரேகை தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த ஆண்டு நவம்பர் 24ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றம், டிச.8ந்தேதி பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 8நதேதி சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கைரேகை தொடர்பான வழக்கு கோர்ட்டில் இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
மேலும், பெங்களூர் சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்