“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்”

52ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தலைவர்.

`1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் முதன்முதலாக சந்தித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.

வெறும் ஆறு மாத குழந்தையான அதிமுக, ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து நின்ற முதல் தேர்தல்.

1973 மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்ப முதலிலேயே எம்ஜிஆரின் அதிமுக முன்னிலை முகம். இன்னொரு பக்கம் அதிர்ச்சியான விஷயம் அடுத்த இடத்தில் இருந்தாக வேண்டிய ஆளுங்கட்சி திமுக மூன்றாவது இடத்தில் இருந்தது. காங்கிரசுக்கு இரண்டாம் இடம்.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் வெற்றிவாகை சூடிய தகவலைக் கேட்டு முரசொலி மாறன் அடித்த கமெண்ட்

“நாட்ல, போற போக்க பார்த்தா நடிகை ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும் போல”

ஏதோ ஒரு எரிச்சலில் முரசொலி மாறன் சொன்னாலும், அவர் வாக்கு பலித்து 18 ஆண்டுகள் கழித்து 1991- ல் ஜெயலலிதா முதலமைச்சராகிவிட்டார்.

ஜெயலலிதாவே அப்போது தாம் ஒரு நாள் முதலமைச்சராவோம் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அப்படி ஒரு எண்ணம் கூட அவருக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

-ஏழுமலை வெங்கடேசன்