
முதல்வர் ஜெயலலிதா, தான் போட்டியிடும் சென்னை ஆர்.கே. தொகுதியில் நகரில் நாளை செய்கிறார்.
ஏற்கெனவே அறிவிக்கபப்ட்ட தனது தேர்தல் பிரசார தேதியில் ஜெயலலிதா மாற்றம் செய்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் ஜெயலலிதா, நாளை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இத் தொகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பேசுகிறார்.
இதையடுத்து, 8ஆம் தேதி தஞ்சாவூரிலும், 10ஆம் தேதி வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலும், 12ஆம் தேதி நெல்லையிலும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், நாளை அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel