சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெ. பிறந்தநாள் விழா மற்றும், ஜெ.வின் மணி மண்டபம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் முழு உருவப்படம் திறக்கப்பட்டது.
படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்
இந்த படம், சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது போன்ற படம் என்று கூறப்படுகிறது.