டில்லி:
மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அண்டை மாநிலமான கேரளா, புதுச்சேரியிலும் அரசின் சார்பில் இன்று துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், பீகார் மாநில அரசின் சார்பிலும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.