நெட்டிசன் ( வாட்ஸ்அப் பதிவு)
தமிழக முதல்வர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தினம் தினம் சில விஷமிகளால் விஷ செய்தி பரப்பபட்டுவருகிறது. முதல்வர் நல்ல ஆரோக்யத்துடன் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்யட்டும். அதை தான் நாமும் விரும்புகிறோம் ஆனால் இது போன்ற சென்சிடிவ் விவகாரத்தில் அதிகாரபூர்வமாக மறுப்பு வெளியாகும் வரை வதந்திகளுக்கு றெக்கை முளைத்து பறக்க தொடங்கிவிடுகிறது.
அவர் சந்தித்தார், இவர் சந்தித்தார், ஆலோசனை நடந்தது! என செய்தி வருகிறது ஆனால் ஒரு புகைப்படம் வந்தால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிடும். உடல் நிலை பாதிப்பு மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொதுவானது முதல்வர் விதிவிலக்கல்ல! ஆனால் அவருக்கு என்ன உடல் நலக்கோளாறு என்பது கூட யாருக்கும் தெரியக்கூடாது என மறைக்க மறைக்க தான் வதந்திகள் பிறக்கிறது.
யாரும் முதல்வரின் மருத்துவ அறிக்கை கேட்கவில்லை.
ஒரு ஆடியோ பதிவு!
அவ்வளவு தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
ஆனால் ஆயுளை நீட்டிக்க புரளி அவசியம் என திட்டமிட்டு வதந்தி பரப்பபடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
காவல்துறை எச்சரிக்கை விடுவதை விட்டு விட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை சொல்வது பொதுநலனுக்கு நலம்!