முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது ..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி என்னும் பெயரிலும் , பிரியதர்ஷினி இயக்கத்தில் The Iron lady என்ற பெயரிலும் Queen என்ற வெப் சீரிஸை இயக்குநர் கெளதம்மேனனும் இயக்குகிறார்.
தமிழக முதல்வராக பதவி வகித்த எனது அத்தை ஜெயலலிதாவுக்கென பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு, நற்பெயர் உள்ளது. இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இப்படங்கள் உள்ளன இந்த திரைப்படங்களையும், சீரியலையும் எடுப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசான என்னிடம் அனுமதி பெறவில்லை. இதனால் இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார் .
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துவிசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.