சென்னை:
‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ என்று சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

இதில் திமுக கட்சிக்காரராக பசுபதி நடித்திருப்பார். மேலும், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பற்றி சுவர் விளம்பரமும் இடம்பெற்றிருக்கும். இதனால் ‘சார்பட்டா பரம்பரை’ திமுகவுக்கு ஆதரவான படம் என்றும், அதிமுகவை விமர்சனம் செய்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதை வைத்து இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

‘சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரைத் தவறாகச் சித்திரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்கில் வைரலாகி வருகிறது, அதையும் பாருங்கள் என்று கலகலப்பாக பதிலளித்தார்.

[youtube-feed feed=1]