சென்னை

னித நேய மக்கள் கட்சி ஈரோடு தேர்தலில் திமுக வுக்கு ஆதரவளிக்கும் என ஜவாஜிருல்லா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது நடந்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 17 ஆம் தேதி முடிவாடைகிறது.

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை இருந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.