விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரது முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய எலும்பு முறிவு  காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு  உள்ளதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தர்மஸ்தலாவில் நடைபெற்ற முதல்போட்டி, மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது

இதைத்தொடர்ந்து அடுத்த டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 2 ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ, பும்ராவுக்கு “அவரது முதுகில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது”  இது  “வழக்கமான கதிரியக்க பரிசோதனையின் போது” வெளிச்சத்திற்கு வந்தது. எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]