அமிர்த சரஸ்
கனடா பிரதமர் இந்தியா வந்த போது தன்னால் அவருக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு சிக்கிய தீவிர வாதி ஜஸ்பால் அத்வால் மன்னிப்பு கோரி உள்ளார்.
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி 80களில் நடந்த தீவிரவாத குழுவில் ஒருவரான ஜஸ்பால் அத்வால் ஒரு இந்திய அமைச்சரை கொல்ல முயன்ற குற்றத்துக்காக சிறை சென்றவர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடு சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது அவர் சீக்கிய தீவிரவாதி ஜஸ்பாலை விருந்து அழைத்திருந்தது கடும் சர்ச்சைக்குள்ளானது. ஏற்கனவே கனடா பிரதமர் சீக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர் என செய்திகள் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜஸ்பால் அத்வால் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர், “நான் எந்த ஒரு வகையான தீவிர வாதத்தையும் ஆதரிப்பவன் இல்லை. நாஅன் சிக்கியர்கள் தனி நாடு கோருவதை இப்போது விரும்பவில்லை. மற்ற சீக்கியர்களைப் போல நானும் எனது நாடு இந்தியா என்பதை உணர்ந்துள்ளேன். என்னால் கனடா பிரதமருக்கு அவருடைய இந்திய வருகையின் போது ஏற்பட்டுள்ள துன்பங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு இனியும் என்னால் எந்த ஒரு விவகாரத்திலும் துன்பம் ஏற்படாது என்பதற்கு உறுதி அளிக்கிறேன்” என கூறினார்.