ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அக்வாமேன்’.

இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அக்வாமேன்: தி லாஸ்ட் கிங்டம்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகனான ஜாசன் மோமாவுக்கு நேற்று முன்தினம் (அக்.28) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவரைப் படக்குழுவினர் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் மூலம் அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாவும், படப்பிடிப்பைத் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது என்றும் படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.