டில்லி,
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 13ந்தேதி இந்தியா வருகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுதினம் (செப்.13) இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குஜராத்தில் நடைபெறவுள்ள இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான ஆண்டு உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து ஜப்பான் நிதி உதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் மும்பை- அகமதாபாத் இடையேயான முதல் புல்லட் ரெயில் திட்ட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் ஜப்பான் , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்துகொள்கிறார்.
இதற்காக ஜப்பானில் இருந்து தனி விமானம் மூலம் வரும் பிரதமர் ஷின்சோ அபே, நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்குகிறார்.
அதையடுத்து இந்திய-ஜப்பான் 12வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
பின்னர், பிரதமர் மோடியுடன், காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு சென்று பார்வையிடு கிறார். அதைத்தொடர்ந்து இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்திய பின்னர், முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.
வரும் 14ம் தேதி காலை சபர்மதி ரயில் நிலையத்தில் நடைபெறும், புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கும் ஷின்சோ அபே, குஜராத் முதலமைச்சர் உடனான விருந்துக்குப் பின் அன்றே ஜப்பான் புறப்படுகிறார்.