பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மிட்சுபுசி நிறுவனத்தின் அதிகாரி குபோக்கி சான் பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தின் எம்.பி.ஏ. மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அப்போது அவர் மாணவர்கள் முன் 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் இருந்து “ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாடலை தமிழில் பாடினார்.

இந்த பாடலை அவர் பாடி முடித்ததும் அரங்கத்தில் இருந்த மாணவர்கள் ஆரவாரம் செய்த நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.