டோக்கியோ

டுக்கடலில் சென்று கொண்டிருந்த ஜப்பான் ராணுவ ஜெட் விமானம் மாயமாக மறைந்துள்ளது.

ஜப்பானில்  விமான விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.   கடந்த 2019 ஆம் ஆண்டு எஃப்35ஏ ஸ்லெட்த் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது குறிப்பிடத்தக்கதாகும்.   அதைப் போல் இன்று ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய விமானப்படை விமானம் மாயமாக மறைந்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இன்று மாலை 5.30  மணி அளவில் ஜப்பானிய விமானப்படையின் எஃப்15 ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் ராடார் வரைமுறையைத் தாண்டி மாயமாக மறைந்துள்ளது.   இந்த விமானம் மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமான நிலையத்தின் அருகே நடுக்கடலில் மாயமாகி உள்ளது..

ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போன இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளிவரவில்லை.   இந்த விமானத்தைத் தேடும் பணியில் ஜப்பான் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.