டோக்கியோ
வரும் 2021 ஆம் ஆண்டு நிச்சயம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என ஜப்பான் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக அப்போட்டிகள் ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செய்தியைச் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஜப்பான் அரசு அறிவித்தன.
தற்போது வரை கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலை உள்ளது.
எனவே ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆண்டில் நடைபெறுமா என ரசிகர்கள் மனதில் ஐயம் பிறந்தது.
அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா உரையாற்றினர்.
அப்போது அவர் வரும் 2021 ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதால் போட்டிகள் நிச்சயம் நடத்தும்” என உறுதி அளித்தார்.
மேலும் அவர், “இந்த ஒலிம்பிக் நிகழ்வு மனிதகுலம் தொற்றுநோயை முறியடித்தது என்பதற்குச் சான்றாக விளங்கும்” எனவும் தெரிவித்தார்.