டோக்கியோ:

அதிக நாடுகளுக்கு எளிதில் சுற்றுலா சென்று வரக்கூடிய வகையில், உலகிலேயே ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட் விவரத்தை சேகரிக்கும் பணியை செய்கிறது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டின் சுற்றுலா விவரங்களை காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது.
அந்த வகையில், 190 நாடுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையிலும், சுற்றுலா மேற்கொள்ளும் வகையிலும் 2019-ம் ஆண்டும் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தாற்போல், 189 நாடுகளுடன் எளிதில் சென்று வரும் வகையில் ஆவணங்களை உள்ளடக்கியதாக தென் கொரியா பாஸ்போர்ட் உள்ளது. இந்த நாடு புதிய விசா பெறுவதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியாக குடியேற்றம் மற்றும் எளிதில் சென்றுவரக்கூடிய நிலையில் ஆசிய நாடுகளே உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.