டோக்கியோ
கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது

கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உல்கெங்கும் கொரோனா பரவுதல் வேகம்டைந்த பிறகு பல சுற்றுலாப்பயணிகளும் தங்கள் பயண திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.   இதனால் அனைத்து உலக நாடுகளும் சுற்றுலாத் துறை கடும் பாதிபை சந்தித்துள்ளது.   இனி கொரோனா தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா தொடங்கும் போது  பல சலுகைகளை அளிக்க வேண்டிய நிலையில் உலக நாடுகள் உள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்.  இந்நாட்டில் இந்த வருடம் நடைபெற இருந்த 2020 ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஏராளமான சுற்றுல் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது.    இத்னால் ஒலிம்பிக் ஏற்பாடுகள், சுற்றுலா பயணிகளை கவரும் ஏற்பாடுகள என ஏராளமான அளவு முதலீடு செய்யாட்டது.   ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஒத்து வைக்கப்பட்டுள்ளதால் கோடைக்கால பயணிகளை மட்டுமே நாடு நம்பி உள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகலை கவருவது குறித்து அரசு ஆலோசனைகள் நடத்தி உள்ளது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஜப்பான் சுற்றுலா நிறுவன அதிபரான ஹிரோஷி டபாடா செய்தியாளர்களிடம் அரசு 12500 கோடி டாலர்களை சுற்றுலா பயணிகள் செலவில் திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   ஆனால் எந்தெந்த வகையில் எத்தனை சதவிகிதம் திரும்ப அளிக்கபடும் என்பது விளக்கப்படவில்லை.
இதைப் போல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஒரு சில நாடுகளில் அறிவிக்கபட்டுள்ளன.   கடந்த மாதம் சிசிலி நாடு சுற்றுலா பயணிகளுக்கு அவர்களுடைய விமான கட்டணத்தில் பாதியையும் விடுதிச் செலவில் மூன்றில் ஒரு பங்கும் திரும்ப அளிக்கப்ப்டும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தககதாகும்.