டோக்கியோ: ஜப்பானில் அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டு மக்கள் இரவில் அவசியமின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும், உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்நாட்டு துணைக் கல்வி அமைச்சா் டெய்டோ டானோஸே, அரசின் உத்தரவை மீறி சமீபத்தில் இரவு விடுதிக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு பிரதமா் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸேயை நீக்கினார். பதவி நீக்கம் செய்ததையடுத்து கட்சியில் இருந்தும் விலகினார். அவருடன் இரவு விடுதிக்குச் சென்ற மேலும் 2 எம்.பி.க்களும் கட்சியில் இருந்து விலகினா்.