ஜனவரி 29: இந்திய செய்தித்தாள் தினம் இன்று… செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தித்துறையினரால் இன்றைய தினம் கவுரவிக்கப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதலாக பெங்கால் கெஜெட் என்கிற வார இதழ் ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவரால் கல்கத்தாவில் வெளியிடப்பட்டது. 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி இந்த இதழ் வெளியிடப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இந்த இதழில், அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான செய்திகள் மட்டுமின்றி, உலக நாடுகளின் போர்ச் செய்திகளும் வெளியானது. இது மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றது.
அந்த பத்திரிகையை கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 29ந்தேதி இந்திய செய்தித்தாள் தினம் கொண்டாடப்படுகிறது.