நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி -மூத்தவர்.
குஷி -இளையவர்.
‘தடக்’ என்ற இந்தி சினிமா மூலம் நடிகையாக ஜான்வி கபூர் அறிமுகம் ஆனார்.
வெளிநாட்டில் ஸ்ரீதேவி மரணம் அடைந்த பிறகுதான் அந்த படம் ரிலீஸ் ஆனது.
இப்போது பல படங்களில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
நேற்று ஜான்விக்கு 24 வது பிறந்த நாள்.
இதனையொட்டி ஜான்வி தனது 24 போட்டோக்களை ஆல்பத்தில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்.
பிஞ்சு குழந்தையாக இருக்கும் போது, ஸ்ரீதேவியுடன் இருக்கும் போட்டோ, தன் தந்தை போனிகபூர் மற்றும் தங்கை குஷியுடன் உள்ள போட்டோக்கள் இதில் அடங்கும்.
ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு “அம்மா. உங்களை தினமும் மிஸ் செய்கிறேன்” என தலைப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி