டில்லி
மொபைலுடன் ஆதார் இணைக்க அரசு தெரிவித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு இதுவரை வழங்கப் படாதது என தெரிய வந்துள்ளது.
இதுவரை வழங்கப்படாத ஒரு உச்சமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி மத்தியில் ஆளும் மோடி அரசு மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளதாக “ஜனதா கா ரிப்போர்டர்” செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு :
ஆதார் எண்ணின் அவசியம் குறித்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆதார் நிறுவனம் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ராகேஷ் திவாதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அது குறித்து அவர் விளக்கங்கள் அமர்வ்டம்கேட்டிருந்தார்.
அதை ஒட்டி அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நேற்று அமர்வு ஆராய்ந்தது. அப்போது அவ்வாறு ஒரு தீர்ப்பு இதுவரை எந்த வழக்குக்கும் அளிக்கவில்லை என தெரிய வந்தது. அதை ஒட்டி அரசின் தொலை தொடர்புத் துறைக்கு, “இது வரை அர்சு குறிப்பிட்டதைப் போன்ற தீர்ப்போ உத்தரவோ உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. ஆனால் இல்லாத ஒன்றை குறிப்பிட்டு நீங்கள் மொபைல் வாடிக்கையாளர்களை ஆதார் எண் இணைக்க வற்புறுத்தி உள்ளீர்கள். இது எவ்வாறு சாத்தியமானது?” எனக் கேள்வி எழுப்பியது.
இந்த கேள்வி அரசு வழக்கறிஞருக்கு தர்ம சங்கடத்தை அளித்துள்ளது. இந்த கேள்விக்கு அவர், “அரசுக்கு மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட தபால்துறை சட்டப்படி உரிமை உள்ளது எனக் கருதுகிறேன். மேலும் தேசிய பாதுகாப்பை மனதில் கொண்டே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என பதிலளித்துள்ளார்.
இவ்வாறு ஜனதா கா ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது. உச்சநீதிமன்றம் இதுவரை வழங்காத தீர்ப்பை சுட்டிக் காட்டி மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக சமூக ஆர்வலர்கள் அரசை குறை கூறுகின்றனர்.