
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நடந்து சனிக்கிழமை வீடும் திரும்பியுள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜானகி கூறுகையில், “கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பைப் பொழிந்து வருகிறார. இங்கு ஓய்வெடுக்க விரும்புகிறேன்.வீட்டில் நுழையும்போது நான் கால் இடறி கீழே விழுந்துவிட்டேன். இதில் என் இடுப்பு எலும்பு முறிந்தது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Patrikai.com official YouTube Channel