அமராவதி:

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஜனசேனா கட்சி வேட்பாளர் ஒருவர், வாக்குச்சாவடிக்குள் புகுந்து அங்கிருந்து எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி  போட்டு உடைத்தார்.

இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திராவில் உள்ள மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  அங்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாண் தலைமை யிலான ஜனசேனா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  அதுபோல 25 மக்களவைத் தொகுதிகளுக்கு  319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஆந்திர மாநிலம்  ஆனந்தபூர் மாவட்டத்தில் குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனசேனா கட்சி சார்பில் மதுசூதன் குப்தா என்பவர் போட்டியிடுகிறார்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், மதுசூதன் குப்தா அங்குள்ள  கூட்டி (Gooty) என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  அங்கு வாக்குப்பதி இயந்திரத்தை பார்த்தவர்,வாக்குப் பதிவு எந்திரத்தில், சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் சரியான முறையில் இடம்பெறவில்லை என்று கூறி அதிகாரிகளிடம்  தகராறில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து  மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தரையில் தூக்கி எறிந்து உடைத்தார். அதை ஊடகத்தினர் படம் பிடித்த நிலையில், அவர்களின்  முன்னாலேயே போட்டு உடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுசூதன் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.