ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது.  இதன் காரணமாக ஜம்மு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் கடும் நிலச்சரி ஏற்பட்டுள்ளது. ரம்பான் மாவட்டத்தின் பல பகுதிகளும் நிலச்சரி ஏற்பட்டுள்ள உள்ளதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிலச்சரிவை சரி செய்யும் பணிகளும், சாலையில் தேங்கியுள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோலீஸ் அதிகாரிதிக்டோல்,  ஜம்மு பகுதியில் உள்ள மங்கி மார்க், மவும்பசி, பந்தியால், சந்தேர்கோடி போன்ற இடங்களில் கடந்த சில நாட்களாக நிலச்சரி ஏற்பட்டு வருகிறது.  மலைகளில் இருந்து கற்கள் சரிந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலையில் கொட்டிக்கிடக்கும். மணலையும் கற்களையும் இயந்திரங்கள் கொண்டு பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால், அப்புறப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

பனிப்பொழிவு, நிலச்சரி காரணமாக  ராம்பான் மாவட்டத்தின் பனிகல் வரை உள்ள நெடுஞ்சாலையிலும் காஷ்மீரை ஒட்டியுள்ள சாலைகளிலும் 7000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.