ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் 51.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.

ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படவுள்ளது. 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன.

முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்முவில் 64.2% வாக்குகளும், காஷ்மீர் பகுதியில் 40.65% வாக்குகளும் பதிவாகியுள்ளன.