ஜம்மு :

ம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 ராணுவத்தினரும் பலியாகினர்.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்களும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கடந்த 1 ம் தேதி முதல், எல்லை பகுதியில் ஊடுருவ காத்திருந்த தீவிரவாதிகளை தேடும் பனி முழுவீச்சில் நடைபெற்றுவந்தது, இந்நிலையில் ஏப்ரல் 4 ம் தேதி சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த கூடுதல் ராணுவ வீரர்களை அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சேர்த்தது இந்திய ராணுவம்.

இடுப்பளவு பணியில் சிக்கிய வீரர்

உறைபனியில் எலிகாப்டரில் இருந்து குதித்த வீரர்கள் சிலர் இடுப்பளவு பனிப்பாறையில் சிக்கி மீண்டனர், மோசமான வானிலை, மழை மற்றும் அடர்த்தியான மூடுபனி அனைத்தையும் பொருட்படுத்தாது முன்னேறிய வீரர்கள் இரு குழுவாக பிரிந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சுபேதார் சஞ்சீவ் குமார், ஹவில்தார் தாவேந்த்ர சிங், சிப்பாய் பால் க்ரிஷன், சிப்பாய் அமித் குமார் மற்றும் சிப்பாய் சாத்ரபால் சிங், ஆகிய 5 பேர் அடங்கிய குழு தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது, ஊடுருவல் காரர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் வெகு அருகில், நேருக்கு நேர் நடந்த துப்பாக்கி சண்டையில், இருதரப்பை சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு பனியில் சறுக்கி சென்ற தடயங்களை வைத்து ஓடிவந்த மற்றொரு குழுவினர் அந்த இடத்தை அடைவதற்கு முன், சுபேதார் சஞ்சீவ் குமார் தலைமையிலான குழுவில் இருந்த 5 ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளுக்கு அருகருகே இறந்து கிடந்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் இன்று ஹிமாச்சல் பிரதேசில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர் இறுதி மரியாதை செய்வதற்காக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இடுப்பளவு பணியிலும் இறங்கி தீவிரவாதிகளை கொன்று தங்கள் உயிரையும் தியாகம் செய்த இந்த வீரர்கள் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் தாக்குதலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.