ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு.
இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. 25- வது ஜேம்ஸ்பாண்ட் படமான ‘’NO TIME TO DIE’’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா காரணமாக தள்ளிக்கொண்டே போகிறது. இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளிவந்திருக்க வேண்டும்.
உலகம் எங்கும் சினிமா தியேட்டர்களை மூடவைத்து, படங்கள் ரிலீசுக்கு கொரோனா தடையாக இருந்தது.

அடுத்த மாதம் ( நவம்பர்) இந்த படம் ரிலீஸ் ஆகும் என இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பெரும் வணிக சந்தையான இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் ‘‘NO TIME TO DIE’’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் ரகசிய போலீஸ் ஏஜெண்ட் 007 ஆக டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.