லண்டன்: 2019ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம், ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங்கிற்கு கிடைத்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் நடைபெற்றது 69வது உலக அழகிப் போட்டி. கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி துவங்கியது இப்போட்டி.

இதில் மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்று போட்டிப் போட்டனர். இவர்களில் பல நிலைகளுக்குப் பிறகு இறுதியாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களிலிருந்து, யார் உலக அழகி என்பதற்கானப் போட்டி டிசம்பர் 14ம் தேதி நடத்தப்பட்டது. இவர்களில், ஐமைக்காவின் டோனி ஆன்சிங், பிரான்ஸின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதிபெற்றனர்.

அறிவுத்திறனுக்கானப் போட்டியில் ஜமைக்கா அழகி சிறப்பாக செயல்பட்டு, இந்த 2019ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார். பிரான்ஸ் மற்றும் இந்திய அழகிகள், முறையே இரண்டாவது மற்றும் மூன்றவாது இடத்தைப் பெற்றனர்.

ஜமைக்காவின் டோனி ஆன்சிங்கிற்கு 23 வயதாகிறது. தற்போது ‍அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்துவருகிறார்.