டில்லி,
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் இன்று காலை 10 மணிக்கு பிரதமரை சந்திக்க இருந்தனர்.
ஆனால், பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்து உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது தடைபட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என்று தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள், ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடைபெற அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமரிட்ம் மனு கொடுக்க நேற்றே டெல்லி சென்றனர்.
இன்று காலை பிரதமரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். ஆனால், பிரதமர் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் அனில்மாதவ் தவே-ஐ சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில், காட்சிபடுத்தும் பட்டியலில் இருந்து காளை களை நீக்கி, அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தம்பித்துரை தலைமையில் அனைத்து அதிமுக எம்.பிக்க ளும் இன்று காலை 10 மணி அளவில் அமைச்சரை சந்தித்தே மனு கொடுத்துள்ளனர்.
மனுகொடுத்துவிட்டு வெளியே வந்த அதிமுக எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பிதுரை கூறியதாவது,
உச்ச நீதி மன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், உச்ச நீதி மன்றம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்ததாக தம்பித்துரை கூறினார்.