டில்லி,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்துள்ளார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

அதில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கலாச்சார விளையாட்டாபன ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்  சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.

தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில்,  தமிழர்களுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்,  அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  1963 – 65 ம் ஆண்டுகளில் நான் அலகாபாத் பல்கலைக் கழகத்தில்  பி.ஏ., படிக்கும் போது தமிழ் டிப்ளமோ பாடம் படித்தேன். அதில் எனது தமிழ்
ழ் புத்தகத்தில் இருந்த முதல் வாசகம் இப்போதும் என் நினைவில் உள்ளது.

அது, ‘தமிழர் வீரம்…தமிழர் வாழ்க’ என்று இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட என்றும் டுவிட் செய்துள்ளார்.