
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இந்நிலையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் மற்றும் பிற நட்சத்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்த சில நாட்களில் படமாக்கப்படுகிறது. இது முடிந்ததும் குறுகிய ஷெட்யூலில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் ஏற்கெனவே ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.
அண்ணாத்த’ திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1].@IamJagguBhai joins the cast of #Annaatthe.@rajinikanth @directorsiva @immancomposer #Nayanthara @KeerthyOfficial pic.twitter.com/k9ZHVLUNNx
— Sun Pictures (@sunpictures) March 16, 2021