புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியூர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காரணமாக மார்ச் 25ம் தேதி புரி ஜெகன்னாதர் ஆலயம் மூடப்பட்ட நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்டது. பின்னர் டிசம்பா் 29ம் தேதி முதல் உள்ளூர் பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பக்தர்களின் வருகை காரணமாக, கோயில் வளாகத்தில் காவல்துறையினரும் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.