டில்லி

ச்சநீதிமன்ற சமீபத்திய அறிவிப்பின்படி ஜகன்னாதர் கோவிலுக்கு 60,418 ஏக்கர் அதாவது 244.5 சதுர மீட்டர் பூரி நகரைப் போல் 15 மடங்கு நிலம் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்த கோவில் ஆகும்.   இந்த கோவிலுக்குப் பலர் நிலங்களைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.  உச்சநீதிமன்றத்தில் இந்த நிலம் குறித்த வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.   அந்த வழக்கு நீதிபதிகள், அருண் மிஸ்ரா, எம் ஆர் ஷா, மற்றும் ரவீந்திர பட் ஆகியோரின் அமர்வின் கீழ் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜகன்னாதர் கோவிலுக்குச் சொந்தமாக ஏராளமான அசையா சொத்துக்கள் ஒரிசா மாநிலத்திலும் மாநிலத்துக்கு வெளியிலும் உள்ளன.  இது குறித்து மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தெரிவித்தபடி கோவிலுக்கு 60,418 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.  இதில் 64,201 ஏக்கர் நிலத்துக்கு உரிமைப் பட்டா உள்ளது.

எனவே மீதமுள்ள நிலத்துக்குத் தேவையான உரிமைப் பட்டாவை உடனடியாக உருவாக்க வேண்டும்.  இன்னும் ஆறு  மாதத்துக்குள் அவை உருவாக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்.  அத்துடன் ஒரிசா மாநிலத்தில் உள்ள அசையா சொத்துக்கள் மற்றும் மாநிலத்துக்கு வெளியே உள்ள அசையா சொத்துக்கள் விவரம் மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அறிவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜகன்னாதர் கோவிலுக்கு 244.45 சதுர மீட்டர் நிலம் உள்ளது  இந்த கோவில் அமைந்துள்ள பூரி நகர மொத்த பரப்பளவு 16.33 சதுர மீட்டர் ஆகும்.  அதாவது கோவிலுக்குச் சொந்தமான மொத்த நிலத்தின் பரப்பளவு பூரி நகரைப் போல் 15 மடங்கு ஆகும் எனத் தெரிய வந்துள்ளது.