நடப்பள்ளி
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில துணை முதல்வர் பவன் கலயாணை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடந்து வரும் ஆந்திர பிரதேசத்தில் துணை முதல்வராக பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என கூறி உள்துறை அமைச்சர் வங்கலப்புடி அனிதாவை, பவன் கல்யாண் விமர்சித்தார்.
அட்ஜாவது பவன் கல்யாண், கடந்த திங்கட்கிழமை பிதபுரம் பகுதியில் பேரணி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என அனிதாவை கடிந்து கொண்டார். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்படவில்லை என்றால், உள்துறை பொறுப்பை கையில் எடுத்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நேற்று ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம்,
”சட்டம் மற்றும் ஒழுங்கு யாருடைய பொறுப்பு? அது முதல்variன் நேரடி கண்காணிப்பில் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், யாரை நீங்கள் (கல்யாண்) கேள்வி கேட்க வேண்டும்? சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை. அதனால், தலித் அமைச்சரை கடிந்து கொள்கிறார் . அவர் படத்தில் பேசுவது போன்று வசனங்களை பேசி வருகிறார்”
என்று கூறியுள்ளார்.