மராவதி

ந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுகளில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் அப்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன் மூலம் பாவம் செய்துவிட்டதாகவும்,  திருப்பதி கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் போலியான தகவலை பரப்புவதாகவும் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்திற்கு பரிகாரமாக 28-ம் தேதி  மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

மேலும் 28-ம் தேதி தாமே திருப்பதி கோவிலுக்கு சென்று சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இன்று திருப்பதிக்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென தனது பயணத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி,

”நாட்டில் உள்ள அனைவருக்கும் எனது மதம் தெரியும் முதல்வராக ஆவதற்கு முன்பே திருமலை கோவிலுக்கு பலமுறை சென்றுள்ளேன் நான் வீட்டில் பைபிளை படித்தாலும், இஸ்லாம், இந்து மற்றும் சீக்கிய மதத்தை தான் மதிக்கிறேன் எனது கட்சியின் தலைவர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க திருப்பதியில் ஆயிரக்கணக்கான கவ;துறையினர் குவிக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சிகள் காட்டுகின்றன.

சந்திரபாபு நாயுடு தனது 100 நாள் ஆட்சியின் தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை கொண்டு வந்தார். லட்டு விவகாரத்தில் தனது தோல்வியை மறைக்க, இறை நம்பிக்கை விவகாரத்தை கொண்டு வந்தார். வேண்டுமென்றே லட்டுவின் தரத்தில் சந்தேக விதைகளை விதைத்துள்ளார்.

என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள். நான் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்திருக்கிறேன்.  தரம் குறைவு என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை.”

என்று கூறியுள்ளார்.